உலகமே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நான் எதிர்ப்பேன் - சீமான் ஆவேசம்
"என்னை பின்பற்றுவர்கள் பெரியார் வேண்டும் என்றால், விலகிச் செல்லலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக தந்தை பெரியார் குறித்து கடும் விமர்சனம் செய்து வருகிறார். சீமானின் கருத்துக்கு திமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் தான் பெரியார் குறித்த கருத்தில் இருந்து மாறுபட மாட்டேன், மன்னிப்பும் கேட்க மாட்டேன் என தொடர்ந்து பேசி வருகிறார் சீமான். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "உலகமே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நான் எதிர்ப்பேன் என மீண்டும் கூறியுள்ளார். என்னை பின்பற்றுவர்கள் பெரியார் வேண்டும் என்றால், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிச் செல்லலாம் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.


