இன்றைய அரசியல்வாதிகளிலேயே எடப்பாடி பழனிசாமி தான் புத்திசாலி- சீமான்
இன்றைய அரசியல்வாதிகளிலேயே எடப்பாடி பழனிசாமி தான் புத்திசாலி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “இன்றைய அரசியல்வாதிகளிலேயே எடப்பாடி பழனிசாமிதான் புத்திசாலி. இன்றைக்கு இருப்பது போன்ற பதற்றம், தப்பு தப்பான திட்டங்கள் அவரது ஆட்சியில் இருந்ததா? அரசியல் விமர்சனம், கருத்தியல் மோதல் இருக்கலாமே தவிர தற்குறி போன்ற கடுமையான சொற்களை அண்ணாமலை பேசுவது தவறு. தம்பி அண்ணாமலை நியமிக்கப்பட்ட தலைவர்... ஐயா எடப்பாடியார் அப்படியல்ல. சாதாரன தொண்டனாக இருந்து உழைத்து படிப்படியாக இன்று கட்சியின் தலைவராகியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தற்போதைய ஆட்சியை விட மிகச்சிறப்பான ஆட்சியை கொடுத்தவர். அவர் ஒன்றும் கார் பந்தயம் விட்டவர் இல்லை. தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அளித்தவர்.
என் குடும்பத்தை பற்றியும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். எங்கே குற்றம் நடந்தாலும், திருச்சிக்கு அழைத்து வந்து விசாரிப்பது ஏன்? செல்போனை ஆய்வு செய்ய வேண்டிய வேலை போலீசாருடையது அல்ல. நாங்கள் செல்போனில் பேசுவது எப்படி பொதுவெளியில் கசிகிறது? கட்சிக்காரர்களுடன் ஆயிரம் பேசுவோம், அதை எப்படி பொதுவெளியில் வெளியிடுவீர்கள்? முதலமைச்சர் வெளிநாடு செல்வதால் அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதலமைச்சர் ஆக்க வேண்டும். ரஜினிகாந்த் துரைமுருகன் பேசியது நகைச்சுவைக்காக தான்” என்றார்.