"நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது"- சீமான்
தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரியை தூக்கியதற்காக கொந்தளிப்பதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோட்டில் வ்செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாட்டு தூக்கப்படும் அதற்கு என்ன செய்வார்கள்.. திராவிடம் என்ற வார்த்தையை நீக்கியதற்கு கொந்தளிக்கிறீர்கள்?, தமிழ்மொழி செத்து விழும்போது இந்த கோபம் வரவில்லையே? நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது வராத கோபம் 2 வரியை தூக்கியதற்காக கொந்தளிப்பதா?” எனக் கேள்வி எழுப்பினார்.


