“சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம்”- சீமான் ‘புதிய’ விளக்கம்

 
s

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள திடலில் வருகின்ற 27-ஆம் தேதி தமிழ் ஈழ விடுதலைக்காக தன் இன்னுயிரை கொடையாக கொடுத்த மாவீரர்களின் நினைவை போற்றும் விதமாக மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பொதுக்கூட்ட திடலில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறத. இதனை பார்வையிடுவதற்காக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பணிகளை பார்வையிட்டார்.

s

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நான் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக, நண்பர் என்ற முறையில் சந்தித்தேன். மேலும் இருவர் சந்தித்தால் எதைப்பற்றி பேசுவோம். அரசியலை பற்றி பேசுவோம். பின்பு திரைப்படத்தைப் பற்றி பேசுவோம். அதை நான் எப்படி வெளியே சொல்ல முடியும்?  வெளியே சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் எதற்கு தனியாக சந்திக்கிறோம்.  உங்கள் முன்னிலையில் வெளியிலேயே பேசி இருப்போமே!” என்றார்.

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

பின்பு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சீமான் அவர்களின் சந்திப்பை சங்கி என்று கூறுவதாக சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சங்கி என்றால் நண்பர்கள் என்று அர்த்தம். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரஜினியை பக்கத்தில் உட்கார வைக்க நீங்க சங்கியா..?? சொங்கியா..?? லுங்கியா..? அங்கியா? என ரைமிங்காக திமுகவை கிண்டல் அடித்து பேசினார்.