மேயர் பிரியாவால் தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியுமா?- சீமான்

 
இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

பட்ஜெட்கள் என்பது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையாகவே உள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

seeman

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “ரூபாயில் வரும் "ரூ" என்பது தமிழ் எழுத்து இல்லாதபோது அதை தமிழ் எழுத்து என்று கூறுவதா? சென்னை மாநகராட்சியில் கடை பலகைகளில் தமிழில் பெயர்கள் இருக்க வேண்டும் எனக் கூறும் மேயர் பிரியா, தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியுமா? தவெக தலைவர் விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்குவதில் தவறில்லை. தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்கலாம். ஆனால் எனக்கு  பாதுகாப்பு தேவையில்லை, நான் தான் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு.

தேவை என்றால் உலகத்தில் உள்ள எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால், இந்த மொழியை கற்றுதான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. நான் கட்சி ஆரம்பிக்கவரவில்லை. நான் பரமக்குடியில் வண்டி ஏறுனது படம் எடுத்து பஞ்சம் பிழைத்தான். காலம் என்னை இங்கு கொண்டு வந்து விட்டது. பட்ஜெட்கள் என்பது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையாகவே உள்ளது. நொய்யல் ஆறே சீரழிந்து கிடக்கும் நிலையில் அருங்காட்சியகம் வைத்து என்ன பயன்?” எனக் கேள்வி எழுப்பினார்.