விஜய் பற்றி எனக்கு நன்கு தெரியும்; அவர் இஸ்லாமியர்களை அவமதிக்க மாட்டார்- சீமான்
மே 18 கோவையில் நடைபெறவிருக்கும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஜய் பற்றி வேறு மாநிலத்திலிருந்து ஒரு இஸ்லாமியர் குறை கூற வேண்டிய தேவை இல்லை. விஜய் பற்றி எனக்கு நன்கு தெரியும். விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை. விஜய் இஸ்லாமியர்களை அவமதிக்க மாட்டார். மாநில தன்னாட்சி பிரிக்கப்பட்டதே தவறு என பாஜக கூறுகிறது. ஆனால் அவர்கள் இடமே மாநில தன்னாட்சியை கொண்டு முன் வைத்து உள்ளீர்கள். யாரிடம் போய் தன்னாட்சியை கேட்கிறீர்கள்? யார் தரப் போகிறார்கள்...? நீட்-ஐ கொண்டு வரும்போது ஏன் வாய் திறக்கவில்லை..? தேர்தல் திருவிழா வரும்பொழுது புனித வேடம் போடுகிறது திமுக.
மாநகராட்சி கட்டிடங்களில், அரசாணை தமிழில் பதிவிடுவது இதுபோன்ற செயல்களால் தமிழ் வாழ்ந்து விடுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி 20% தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்கி வருக்கிறதா இந்த அரசு? ஆள் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கு நாங்கள் வரவில்லை, அடிப்படை மாற்றத்திற்கான அரசியல் மாற்றத்தை கொண்டு வர நாங்கள் வந்தவர்கள். இந்த கட்டிடத்தை தவிர்த்து விட்டு புத்தம் புதிதாக மாற்று கட்டிடத்தை கட்ட வந்தவர்கள் நாங்கள். புதிதாக படைக்க வந்தவர்களின் பெயர் தான் புரட்சி என்று கூறுகிறார்கள், அதைத்தான் நாங்கள் செய்ய வந்துள்ளோம்.
திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஊழலில் வித்தியாசம் இல்லை. இரண்டுமே ஊழல் கட்சிகள் தான், அதிமுகவில் மட்டும் ஊழல் இல்லாமலா இருக்கிறது...? ஒரே ஒரு வித்தியாசம் அதிமுக கொடியில் அண்ணாவின் படம் இடம்பெற்றுள்ளது, அது போன்று திமுகவில் இல்லை. 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை வருகின்ற தேர்தலில் போட்டியிட இறக்குவேன். மேலும் சின்னம் கிடைத்த பிறகு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். நமது கல்வி ஒழுக்கத்தையும் நன்னெறியையும் கற்பிக்கவில்லை. குற்றத்தின் நோக்கத்தை கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பொழுது தான் தீர்வு கிடைக்கும். அமைச்சர் பொன்முடி பல மாணவர்களை உருவாக்கியவர், அவர் இதுப் போன்று பேசியது ஏற்புடையது அல்ல, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமா இல்லையா என்பது அவர்கள் கட்சியின் நிலைபாடு” எனக் கூறினார்.


