விஜய்யை மீண்டும் அணில் என விமர்சித்த சீமான்
அணில் 'ஜங்கிள் ஜங்கிள்' என்று தான கத்த வேண்டும் ஏன் 'அங்கிள் அங்கிள்' என கத்துகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மதுரை மாநாடு பேச்சு குறித்து கருத்து கூறியுள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “கடந்த விக்கிரவாண்டி மாநாட்டில் முதலமைச்சர் சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக மாறினார். அணில் 'ஜங்கிள் ஜங்கிள்' என்று தான கத்த வேண்டும் ஏன் 'அங்கிள் அங்கிள்' என கத்துகிறது. விஜய்யின் பாதுகாப்புக்கு இவ்வளவு பவுன்சர்கள் எதற்கு? நாளை மக்களை எப்படி சந்திப்பீர்கள்? கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகன்னு தம்பி விஜய் சொல்றார். அரசியலுக்கும், கொள்கைக்கும் என்ன வேறுபாடு என்பதை தம்பி விஜய் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
இபிஎஸ் முதலமைச்சராக இருந்த நான்கரை ஆண்டுகளில் அதிமுக யாரிடம் இருந்தது என விஜய் கேட்காதது ஏன்? அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் விஜய், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுகிறார். 2016 தேர்தலிலேயே அம்மா ஜெயலலிதா என்னை கூட்டணிக்கு கூப்பிட்டார். நான் வரமாட்டேன் என்று சொன்னேன். நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு நிமிடத்தில் ஊழலை ஒழிப்பேன். சட்டமன்றம் சென்று வெறுமனே மேஜையை தட்டுவதற்கு பதில் வீட்டில் சாணியை தட்டிவிட்டு போய்விடலாம். த.வெ.க. மாநாட்டில் 10 லட்சம் பேர் கூடினார்களா..? திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. யாரு கூட்டம் பெருசா இருக்குனு பார்த்துடலாம். பாஜக அலுவலகத்தில் இந்து - இஸ்லாமிய இணையருக்கு திருமணம் செய்துவைப்பார்களா? மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் தாழ்த்தபப்ட்ட ஆணுக்கும் உயர்சாதி பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.


