பாஜகவும் திமுகவும் ஒன்றுதான் - சீமான்

 
ச் ச்

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68 வது நினைவு தினத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருகை தந்தார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

“உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ..”- பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு எழுந்த பெரும் கோபம் சாதியை இருவையும் தீண்டாமை கொடுமையும் துடைத்தெரிய களத்தில் என்ற பெரும் போராளி. உயர்வு, தாழ்வற்ற சமதர்ம சமூகம் படைக்க எண்ணற்ற முன்னோர்கள் இந்த மண்ணிலே போராடி இருக்கிறார்கள். அதில் மறக்க முடியாத போராளியாக இருப்பதால் தியாகி இமானுவேல் சேகரன் அவருடைய 68 வது குருபூஜை நாளில் பெருமுகத்துடன் திமிரோடும் நாம் தமிழர் கட்சி சார்பில் மலர் அஞ்சலியும், புகழ் அஞ்சலியும் செலுத்தியுள்ளோம். என்ன காரணத்திற்காக அவருடைய இரத்தம் இந்த மண்ணில் சிந்தப்பட்டதோ அந்த கனவை தொடர்ந்து கொண்டு சென்று நாம் தமிழர் கட்சி நிறைவேற்றும் எங்கள் உறுதி பட்டியல் விளக்கு தேவேந்திரர் இலக்கு என்ற முழக்கத்தை முன்வைத்து தொடர்ச்சியாக அதிகாரத்திற்கு எதிராக கோரிக்கை வைத்து நாம் தமிழர் கட்சி போராடி வருகிறோம். 

மக்களின் கோரிக்கைகளை, பிரச்சனைகளை அரசு கையில் எடுக்காத போது மக்களுக்கு இருக்கிற இறுதி வாய்ப்பு என்பது அதே அதிகாரத்தை அதே அரசை கையில் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. அப்படிதான் பல காலங்களாக தாழ்த்தி வீழ்த்தி வைக்கப்பட்டது. மக்கள் தற்போது மேலெழுந்து வருகின்றனர். பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டுள்ளார். அந்தந்த கட்சிகளில் இருக்கக்கூடிய நிர்வாக குழப்பங்களில் நாம் தலையிட முடியாது. என் சொந்தக் கட்சியில் மற்ற கட்சிகள் தலையிடுவது என்பது நாகரிகமற்றது. அது அவர்களுடைய கட்சி பிரச்சனை, நாட்டின் பிரச்சனை கிடையாது. 2024 தேர்தலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கட்ச தீவை மீட்க வேண்டும் என பேசினார். அதன் பின் அவர் அந்த பேச்சுவார்த்தை கைவிட்டார். கட்சிகளில் தேர்தல் அறிக்கையில் கட்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வாக்குறுதி வழங்குகின்றனர். அதன்பின் அது பற்றி பேசுவதில்லை. தமிழக முதல்வராக என்னை ஆக்கினால் கட்சத்தீவை கண்டிப்பாக மீட்பேன். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வேண்டாம்... பாண்டிய மன்னர் பெயரை வையுங்கள். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர் கருணாநிதி. பாஜகவின் எல்லாக் கொள்கையோடும் ஒத்துப்போகும் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக ஆட்சி” என்றார்.