“நடிகர் அஜித்தை இறக்கினால் இதைவிட 2 மடங்கு கூட்டம் வரும்”- சீமான்

 
ச் ச்

திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Image

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இயற்கை வளங்கள் குறித்து நான் போதிக்கும்போது யாருக்கும் புரியாது, பாதிக்கும்போதுதான் புரியும். நடிகர் என்றாலே கூட்டம் வரதான் செய்யும். திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும், நடிகர் அஜித், ரஜினி, நயன்தாராவை இறக்கினால் இதைவிட இன்னும் கூட்டம் வரும்.  கூட்டத்தை பார்க்காதீர்கள். முன்வைக்கும் கொள்கையைப் பாருங்கள். கூட்டத்தை விட கொள்கைதான் முக்கியம், மக்களுக்காக நான் தான் அதிகம் பாடுபடுகிறேன். நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது, பாதிக்கும் போதுதான் உங்களுக்கு தெரியும். நான் இப்போது பேசுவது உங்களுக்கு வேடிக்கையாகத்தான் தெரியும். 


இசை இறைவனாக இளையராஜாவை பார்க்கிறோம்... இளையராஜாவிற்கு நானும் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு இருந்தேன், அரசு பாராட்டு விழா எடுத்தது. சச்சினுக்கு விருது தரும்போது இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில் எங்களுக்கு பெருமை” என்றார்.