விஜயலட்சுமி விவகாரத்தில் நீதிமன்றம் மன்னிப்பு கேட்க கூறவில்லை- சீமான்
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இளையராஜா அப்பாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான், விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள், இசைத்துறையில் இளையராஜாவை விட சாதனையாளர்கள் இதுவரை இல்லை. அதே சமயம் தனிப்பட்ட முறையில் வருத்தம் உள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்த மரியாதையை வ உ சிதம்பரனார், பாரதியார் ஆகியோருக்கு தரவில்லை. சச்சின் டெண்டுல்கரை விட பாரதியாரும் வ.உ.சிதம்பரனாரும் இழிவாகப் போய்விட்டார்களா? மேலும் இளையராஜாவை இசை அமைப்பாளராக பார்ப்பதை விட நாங்கள் அவரை இசை இறைவனாக தான் பார்க்கிறோம். அவரது பெயரில் விருது வழங்குவது எனக்கு பெருமை தான். முதலில் அவருக்கு நான் தான் பாராட்டு விழா எடுப்பதாக இருந்ததாகவும் இது குறித்து அவரிடமும் கேட்டேன். அரசு அதனை செய்யும் பொழுது இடையூறு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன். மேலும் மாநில அரசு பாரதிராஜா போன்ற திரை கலைஞர்களையும் கௌரவப்படுத்தி இருக்க வேண்டும்.
திரையில் பார்த்தவர்கள் நேரில் வரும்பொழுது கூட்டம் வரத்தான் செய்யும், நாங்களும் சிறு வயதில் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களை காண்பதற்கு மணிக்கணக்கில் காத்துக் கிடந்தோம். பிறகு அவர் வராமல் நாங்கள் ஏமாந்தும் போனோம். மேலும் என் சகோதரர் அஜித், ரஜினி, நயன்தாரா ஆகியோர் வந்தாலும் கூடத் தான் கூட்டம் வரும். கூட்டத்தைப் பார்க்காதீர்கள் கொள்கைகளை பாருங்கள் என்றார். அடுத்தபடியாக மலைகளுக்காக போராட்டம் நடத்தப் போகிறோம். நான் பேசுவது எல்லாம் தற்போது புரியாது. பாதிக்கும்போது தான் புரியும். கனிம வள கொள்ளையை தடுப்பதற்கு ஒரே வழி என்னை அதிகாரத்தில் அமர வைப்பது தான். மேலும் இது போன்ற கேள்வியை என்னிடம் கேட்பதைவிட நேற்று குற்றஞ்சாட்டிய விஜய்யிடம் கேளுங்கள்” என்றார்.

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது குறித்தான கேள்விக்கு, அப்படியெல்லாம் எதுவும் கூறவில்லை நீங்களாக எதையும் பேச வேண்டாம் நீதிமன்றம் அவ்வாறு கூறியதா? அந்தத் தீர்ப்பை காண்பிக்க வேண்டும் என பேசினார். பிரதமர் மணிப்பூர் சென்றது குறித்தான கேள்விக்கு அவர் போக வேண்டும் என்று நினைத்திருப்பார் அதனால் போய் இருப்பார், அங்கு கலவரம் பற்றி எரியும் பொழுது, போகாமல் தற்பொழுது அங்கு எந்த பிரச்சனையும் இல்லை அப்பொழுது செல்கிறார். மேலும் பிரதமரை அருணாச்சல பிரதேசத்திற்கு சென்று ஓட்டு கேட்டு வர முடியுமா?. சீனக்காரர்கள் அதனை அவர்களது மாநிலம் எனக் கூறுகிறார்கள் என்றார். பாகிஸ்தான் உடன் உடனே போரெல்லாம் அறிவிக்கிறீர்கள் ஆப்பரேஷன் சிந்துரெல்லாம் போடும்பொழுது ஆபரேஷன் இந்தூர் என்ற ஒன்றை இலங்கை விவகாரத்தில் செயல்படுத்தலாமே என தெரிவித்தார். 2026 இல் என் கையில்தான் ஆட்டம் இருக்கும் என்றும் இங்க இருக்கக்கூடியவர்கள் மக்களின் இதயத்தில் இருந்து மக்களின் பிரச்சினையை பேச மாட்டார்கள் என தெரிவித்தார். எங்க இருக்க கூடிய அரசியல்வாதிகள் பேப்பரில் எழுதி வைத்து படிக்கிறார்கள், எடப்பாடி பழனிசாமியும் பேப்பரில் எழுதி வைத்து தான் படித்து வருவதாக தெரிவித்தார். இவர்கள் பெரிய தாளை வைத்து படிக்கிறார்கள் ஸ்டாலின் சிறிய பேப்பரை வைத்து படிக்கிறார் என தெரிவித்த அவர், மழை வந்தால் பேப்பரை வைத்து படிக்க முடியுமா> என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.


