“என்றைக்கும் விஜய் எனக்கு தம்பிதான்! பெரியாருக்கு ஓட்டு இல்லை, காந்திக்குதான் ஓட்டு”- சீமான்

 
seeman seeman

ஒன்றரை மணி நேர பேச்சில் ஒரு நொடி பேசும் விஜய் பற்றிய விமர்சனத்தை ஊடகங்கள் தான் டிஆர்பிக்காக ஊதி பெரிது படுத்துகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

seeman

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திமுக அதிமுக இரண்டு திராவிட கட்சிகளையும் எதிர்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் தம்பி விஜய் அவர்கள் இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டு வந்தால் என்ன செய்ய முடியும். என்னை வாழ வைத்த மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்று சொன்னால் பரவாயில்லை. உங்களுக்காக என்னுடைய வருவாயை , உச்சத்தை விட்டுட்டு வந்தேன் என்று சொல்லும்போது எங்களுக்கு ஒரு கேள்வி வருகிறது யார் உங்களை வரச் சொன்னார்கள் என்று? ஒரு மணி நேர உரையில் ஒரு நிமிடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சீமான் விஜயை விமர்சித்துவிட்டார் என சொல்லி TRP க்காக ஒளிபரப்புகிறீர்கள். திமுகவை எதிர்த்தால் பாஜக RSS கைக்கூலி. விஜயை எதிர்த்தால் திமுக கைக்கூலி. அரசியலுக்கு வந்தால் சேவை செய்ய வேண்டுமே தவிர பெருமை பேசக் கூடாது. விஜய் மற்றவர்களுக்குதான் தலைவர், என்றைக்கும் விஜய் எனக்கு தம்பிதான்.

சீமான் ஸ்டாலினிடம் பெட்டி வாங்கிவிட்டார் என்று ஏன் சொல்கிறீர்கள்? ஸ்டாலின் சீமானுக்கு பெட்டி கொடுத்து விட்டார் என்று சொல்ல வேண்டியதுதானே! எந்த கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது என ஸ்டாலின் கூறுகிறார். தனியாக போகும்போது பாட்டு பாடி செல்கிறீர்கள் என்றால் பயந்துவிட்டீர்கள் எனப் பொருள், பேய் பிசாச வருகிறது என்று அது போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளையும் கூட வைத்துக்கொண்டு, வாக்குக்கு காசு தேவைப்படுகிறது. ஆனால் வெளிய எந்த கொம்பனாலும் தோற்கடிக்க முடியாது என்கிறீர்கள். தேர்தல் காலத்தில் சீமான் ஐயா ஈ வெ ராமசாமியை தவறாக பேசிவிட்டார் என்று சொல்லி ஐயா ராமசாமி ஆதரிப்பவர்கள் வாக்கு கேட்க முடியுமா? இங்கு பெரியாருக்கு ஓட்டு இல்லை, காந்திக்கு தான் ஓட்டு!” என்றார்.