விஜயலட்சுமி என்ன அன்னை தெரசாவா? - சீமான்
அதிமுக, திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்னை கேள்வி கேட்கும் விஜயலட்சுமி என்ன அன்னை தெரசாவா? ஐரோம் சர்மிளாவா? அன்னி பெசண்ட் அம்மையாரா? என்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? மொழி, இன அரசியல் பேசுவது வெறுப்பரசியல் என்றால், அண்ணாமலை கிறிஸ்தவர் இஸ்லாமியரை எதிர்த்துப் பேசுவது விருப்பரசியலா?
அதிமுக, திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்களாளி சண்டனை. திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்து வந்தவன் தான் நான். திராவிட கழகங்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இருப்பது சகோதர யுத்தம். திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது கனவல்ல. தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. மோடியை எதிர்த்து திமுக நின்றால் நான் தேர்தலில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு தருவேன். ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். திமுக எதிர்த்து போட்டியிட்டால், நான் வாபஸ் வாங்கிவிடுகிறேன், திமுகவை நான் ஆதரிக்கிறேன்” என்றார்.