மறுபடியும் அதே அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிடுவேன் - சீமான் ஆவேசம்

 
seeman

டுவிட்டர் கணக்கு முடக்கத்திற்கு காரணமான அதே அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிடுவேன் என 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. சட்ட கோரிக்கைக்கு ஏற்ப கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், சீமானின் டுவிட்டர் கணக்கு தடை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகர்களின் டுவிட்டர் கணக்கு தடை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாள சீமான், டுவிட்டர் கணக்கு தடை செய்யப்பட்டது குறித்து கூறியிருப்பதாவது:- '
எதிர் கருத்தே வரக்கூடாது என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும். நம் வீட்டுப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வீதியில் போராடுவதை கண்டு சகித்துக்கொண்டு இருக்க முடியுமா? உலக அரங்கில் இது பெரிய அவமானம் இல்லையா? அதன் காரணமாக என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கினால் எனக்கு அது மகிழ்ச்சிதான், பெருமைதான். மறுபடியும் அதே அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிடப் போகிறேன். இவ்வாறு கூறினார்.