பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் - சீமான் அதிரடி

 
seeman

பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நமது நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ள நிலையில், பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ள எதிர்க்கட்சிகள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை இணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளன. இதேபோல் பாஜகவும் மீண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தங்களது கூட்டணி கட்சி தலைவர்களுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் ஆலோசனை நடத்தியது. இதனிடையே பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த தகவலை பாஜக மேலிடம் உறுதிப் படுத்தவில்லை

PM Modi

இந்த நிலையில், பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றி சீமான் இந்த கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் சீமான் இதுவரை சந்தித்த எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்பதால் அவரது பேச்சை பாஜகவினர் கண்டுகொள்வதாக தெரியவில்லை.