தேர்தலில் நின்று மக்களை சந்திக்காத நிர்மலா சீதாராமனுக்கு ஏன் அமைச்சர் பதவி?- சீமான்
தேர்தலில் நின்று மக்களை சந்திக்காத நிர்மலா சீதாராமனுக்கு பத்தாண்டுகளுக்கு எதற்கு உயர்ந்த பதவி? தேர்தலில் மக்களையே சந்திக்காத சிவசுப்பிரமணியனுக்கு எதற்கு பொறுப்பு? மக்களை சந்தித்து மக்களின் நன்மதிப்பை பெறாதவர்களுக்கு எப்படி ஆளும் பொறுப்பை கொடுக்கிறீர்கள்? இது என்ன மாதிரியான அமைப்பு என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்னும் மாலை நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த சீமான் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சீமான், “ நான் தனித்து தான் போட்டியிட போகிறேன். இந்தியா கூட்டணியில் நிதீஷ் குமார் ராஜினாமா செய்து பாஜகவுக்கு செல்ல இருக்கிறார். பாரதிய ஜனதா தொடர்ந்து ஆண்டால் இந்திய கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவது உறுதி. இந்தியாவை துண்டு துண்டாக சிதைத்து விடுவார்கள்.
சாமியை தரிசிப்பதை விட ஏழையை பார்த்து அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதை விட வேறு ஒரு திருப்பணி இருக்க முடியுமா? அதைவிட ஒரு வழிபாடு இருக்க முடியுமா எங்களை ஒரு மனிதனாக மதிக்கவில்லை. வேறு என்ன பேசுவது? குளிர், மழை வெள்ளத்தில் கூட மத்திய அரசு காப்பாற்ற வரவில்லை. ஒக்கி புயலின் போது பிரதமர் கன்னியாகுமரி வந்து பார்த்து சென்றார். அதை தான் சீதாராமன் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம்மை வைத்திருப்பது வரிக்கும் நிலத்தின் வளத்திற்கும் தான், கங்கை படுகையில் மீத்தேன், ஈத்தேன் இருக்கா? இல்லையா? ஏன் தோண்டவில்லை? மேற்கு தொடர்ச்சி மலை கேரளாவில் தொடங்கி இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் தொடங்க முடியாமல் தேனியில் தொடங்குவதற்கான காரணம் அங்கே கேட்க ஆள் இருக்கிறது இங்கே இல்லை.
ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து விட்டு கட்டுகிறார். பிரதமரும் செட்டு போட்டு தான் ராமர் கோவிலை திறந்து இருக்கிறார். இனிமேல் தான் கட்டுவார்கள். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திறப்பார் என்பது எனது கருத்து. அவரால் கோவிலுக்குள் நேராக சென்று தொட்டு தரிசிக்க முடிந்ததா? அவரை மனிதனாக கூட நடத்தவில்லை. நாட்டின் முதன்மை அமைச்சருக்கு இந்த நிலைமை. பிரசாதத்தை கொடுத்துக் கொண்டே வரும்போது அவரை தாண்டி யோகி ஆதித்யநாத்துக்கு கொடுக்கிறார்கள் என்றால் நீங்கள் நாட்டின் முதல் குடிமகனாக ஆகிவிட்டாலும் பழங்குடி மகன்தான். கோவிலுக்குள் விடமாட்டான், பாராளுமன்ற கட்டிடம் திறக்க கூப்பிட மாட்டான், நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்துக்கு கோவிலுக்குள் செல்ல முடிந்ததா? இந்தியாவின் முதல் குடிமகனுக்கு தீண்டாமை இருக்கிறது என்றால் நாமெல்லாம் ஏமாத்திறம். சகோதரத்துவம், சமத்துவம், வேற்றுமை, ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று வார்த்தை. இது சனாதன தர்மம்.
பாஜகவில் இருப்பவர்களுக்கு எதுவுமே தேவையில்லை. ராமர் கோவில் இருந்தால் போதும். நாடு முழுவதும் வேலையில்லாமல் இருக்கிறார்களே என்று கேட்டால் ஜெய் ஸ்ரீ ராம்! வளர்ச்சி சம்பந்தமான எந்த கேள்வி கேட்டாலும் ஜெய் ஸ்ரீ ராம் தான் பதில், ஜெய் ஸ்ரீ ராமை வைத்து தான் ஒழிக்க வேண்டும். தேர்தலில் நின்று மக்களை சந்திக்காத நிர்மலா சீதாராமனுக்கு பத்தாண்டுகளுக்கு எதற்கு உயர்ந்த பதவி? தேர்தலில் மக்களையே சந்திக்காத சிவசுப்பிரமணியனுக்கு எதற்கு பொறுப்பு? மக்களை சந்தித்து மக்களின் நன்மதிப்பை பெறாதவர்களுக்கு எப்படி ஆளும் பொறுப்பை கொடுக்கிறீர்கள்? இது என்ன மாதிரியான அமைப்பு, மக்களுக்கு பிடிக்காத அரசியல்வாதிகள் அமைச்சராக வந்து தங்களை ஆண்டு விடக் கூடாது என்பதுதான் மக்களின் கோபம். ஆனால் மீண்டும் அவருக்கு அதிகாரம் கொடுத்தால் மக்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இது ஜனநாயகத்துக்கு எதிரான துரோகம்” என்றார்.