பாஜக ஒரு தமிழரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் நாங்கள் ஓட்டு போடுகிறோம் - சீமான்

 
seeman

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு தமிழரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் நாங்கள் ஓட்டு போடுகிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மண்வளமே மக்கள் நலம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அப்படி எனில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழரை வேட்பாளராக நிறுத்துங்கள் நாங்கள் ஓட்டு போடுகிறோம். காங்கிரசும், பா.ஜனதாவும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதற்காக வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லுங்கள் நான் கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் அல்லது பா.ஜனதாவில் சேர்ந்துவிடுகிறேன். காங்கிரஸ் இனத்தின் எதிரி. பா.ஜனதா மனித குலத்தின் எதிரி. கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும். இப்போது கொடுக்கும் இலவச கல்வி தரம் இல்லை. குமரியை சேர்ந்த அமைச்சரின் மகன் அரசு கல்லூரியில் படிப்பாரா? 

seeman

தொடர்ந்து பேசிய சீமான், செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். பிறகு எதற்காக காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கணும் எனக் கேட்கிறார்கள். செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனை நடத்துகிறார்களாம். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனைக்கு சென்று உள்ளனர். இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள். இவ்வாறு கூறினார்.