நான் தான் சம்மனை கிழிக்க சொன்னென் - சீமான் மனைவி கயல்விழி பேட்டி

 
kayalvizhi kayalvizhi

படிப்பதற்காக நான் தான் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்துக் கொண்டு வரச் சொன்னேன் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். இன்று விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட போலீசாரின் சம்மனை பாதுகாவலர் கிழித்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறி சீமான் வீட்டின் காவலாளி மற்றும் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானின் மனைவி கயல்விழி கூறியதாவது: மனரீதியில் துன்புறுத்தவே எங்கள் பாதுகாவலரை கைது செய்துள்ளனர். நேர்மையான தலைவர் என் கணவர், சிறையை கண்டு எங்களுக்கு பயமில்லை. நீலாங்கரை ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உள்ளது. பாலியல் குற்றத்தை முன்வைத்து சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். சீமான் இங்கு இல்லையென தெரியும், எதுவுமே சொல்லாமல் சம்மனை ஒட்டியுள்ளார்கள். சம்மனை நான் தான் கிழிக்க சொன்னேன், படிப்பதற்காக கிழிக்க சொன்னேன். எங்கள் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் எந்த தவறும் செய்யவில்லை. முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என கூறினார்.