முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - சீமான் வாழ்த்து

 
tn


தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 71ஆவது பிறந்தநாளையொட்டி சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

tn

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  பிறந்த நாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அவர் பின்னர்  தனது 71-வது பிறந்தநாளையொட்டி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்நிலையில்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


 

உடல் வலிமையும், உள்ள உறுதியும் குன்றாது நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளைத் தொடர்ந்திட என்னுடைய அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.