சீமானின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம்!!

 
seeman seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம்  குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Seeman

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் ,  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டவாரியாக தொகுதிக் கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுவருகிறார். அதன் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் மூன்றாம்கட்டப் பயணத்திட்டம் பின்வருமாறு:-

tn

வருகிற 22 ஆம் தேதி திருவள்ளூர்,  காஞ்சிபுரம் மாவட்ட கலந்தாய்வு- குமணன்சாவடி எஸ். எஸ். மஹால் பூந்தமல்லியில் நடைபெறுகிறது.  இதில் திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அதேபோல 23ஆம் தேதி பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாதவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி , அம்பத்தூர் தொகுதிகளை சாரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.