“ஹெச்.ராஜா முதலில் எதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறட்டும்! எங்கு போட்டியிட்டாலும் தோல்விதான்”- சேகர்பாபு
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற யாரையும் அண்ட விடாமல் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் உண்மையான பாசிஸ்ட் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “ தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 3967 கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 ஆயிரமாவது கோயிலாக வியாசர்பாடி ரவீசுவரர் கோயிலுக்கு குடமுழக்கு நடத்தப்படவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 8050 கோடி மதிப்பிலான 8027 ஏக்கர் நிலங்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி அமைத்தால் இந்து சமய அறநிலையத்துறை ஆன்றோர் சான்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என எச்.ராஜா கூறுகிறார். அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பா என அழைக்கப்படுவார். எச்.ராஜா முதலில் எங்காவது தேர்தலில் நின்று வெற்றி பெறட்டும். அதன் பிறகு இந்து சமய அறநிலையத்துறை ஆன்றோர் சான்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என பேசட்டும். எச்.ராஜா எங்கு போட்டியிட்டாலும் தோற்கடிக்கப்படுவார், பாஜகவிலே அவரை யாரும் கண்டுகொள்வதில்லை என்பதால் இதுபோன்று பேசி வருகிறார்.
திமுக அரசி பாசிச அரசு என எடப்பாடி பழனிச்சமி விமர்சிக்கிறார். யாரையும் அண்ட விடாமல் விரட்டி அடிப்பதுதான் பாசிசம், அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து செல்பவர்கள் கூட மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளுங்கள் என கேட்டும் யாரையும் அண்ட விடாமல் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் பாசிஸ்ட். இந்தியா முழுமவதும் சாதி மத மோதல்களை கிறித்தவர்கள் மீதான மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில் அத்தகைய மோதல்களை தமிழ்நாட்டில் நடைபெறாதவாறு முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்கியுள்ளார். குந்தம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையம் ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.


