திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சேகர்பாபு சாமி தரிசனம்
May 3, 2026, 10:39 IST1777784965593
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் அமைச்சர் சேகர்பாபு.

தமிழக தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கையுடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.ஏற்கனவே பல தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவுகள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக தொடரும் என்றும் தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் எனவே அதிமுக தவெக கூட்டணியுடன் ஆட்சியை பிடிப்பார்கள் என கூறியுள்ளனர். இந்தநிலையில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு, அனைகட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமாருடன் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனம் செய்து வைத்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

