அடுக்கடுக்கான பழி, பாவம்... எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த சேகர்பாபு

 
edappadi palanisamy sEkarbabu

அடுக்கடுக்கான பழி மற்றும் பாவங்களால் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு தமிழ்நாட்டு மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்டது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சேகர்பாபு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “திராவிட மாடல் அரசு மக்களின் தேவைகளை அறிந்து அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதும், மக்கள் பிரதிநிதிகளின் நிதியிலிருந்து மக்களுக்கு பயன்படும் திட்டங்களை நமது அரசு செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் இன்று இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் என்ற தாயகம் கவி அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மக்களுக்கு பயன்படும் வகையில் திருவிக நகர சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 72 வார்டில் 3 இடங்களில் 1.12 கோடி மதிப்பீட்டில் 4 பல்நோக்கு மைய கட்டிடங்களான நியாய விலை அங்காடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டுகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பாலாறும் தேனாறுமாக ஓடியது, ஸ்டெர்லைட் விவகாரமே இதற்கு எடுத்துக்காட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரமே எனக்கு தெரியாது என்று சொன்னவர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருவரை ஒருவிரல் நீட்டி குற்றம் சாட்டும் பொழுது இதர மூன்று விரல்களும் தன்னைத்தான் குற்றம் சாட்டுகிறது என்பதை எடப்பாடி மறந்து விட்டார், அடுக்கடுக்கான பலி பாவங்களால்தான் அவருடைய ஆட்சி இந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்டது. தனிப்பட்ட விரோதத்தின் காரணங்களுக்காக நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து அதற்கு காரணமானவர்களை கைது செய்யும் அரசு திராவிட மடல் அரசு. தமிழ்நாட்டில் நடைபெறுவது நீதி தேவன் அரசு என்பதை எடப்பாடி பழனிச்சாமிக்கு கூற விரும்புகிறேன்” என்றார்.