“சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி வழங்கப்படும்" - முதல்வர் ஸ்டாலின்

 
stalin stalin

மாநில அளவிலான மூன்றாவது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) கூட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் 'மதி அங்காடிகள்' நிறுவப்படுவதுடன், சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ‘மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்' வழங்கப்படவுள்ளன. மேலும் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் ‘மதி திணை உணவகங்கள்’, ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன சுய உதவிக் குழு உறுப்பினர்களைப் பயிற்றுவித்து, அவர்களின் பங்கேற்பின் மூலம், தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

cm stalin

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மன் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 2022-23-ஆம் ஆண்டில், 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் சுகம்யா பாரத் அபியான் (தடையற்ற சூழலை உருவாக்குவதற்கான இயக்கம்) மாநில அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகள் அணுகத்தக்க சூழலை ஊக்கப்படுத்துவதற்காகத் தணிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மாநிலம் முழுவதும் 93 கோட்டாட்சியர் அலுவலகங்கள், 312 வட்டாட்சியர் அலுவலகங்கள், 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என மொத்தம் 790 கட்டடங்களில் ரூ.4.74 கோடி செலவிலும், 200 சுற்றுலா தலங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவிலும் தணிக்கை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வேளாண்மை உழவர் நலத் துறையின் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கை 284. இதில் 2021 வரை முதல் கட்டமாக, 63 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இணைக்கப்பட்டன.

mk stalin

2021-22 ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டமாக 64 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் மற்றும் 2023-ஆம் ஆண்டில், மூன்றாம் கட்டமாக 30 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்கப்பட்டுள்ளன.“நன்றே செய் அதையும் இன்றே செய்" என்ற வகையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்தி, திட்டங்களின் பயன் முழுமையாக மக்களைச் சென்றடைய துறைத் தலைவர்களும், அரசு அலுவலர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும். தங்களுக்குக் கீழ் பணியாற்றுவோரும் அவ்வாறு செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உறுப்பினர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டும் என்று அன்புடன் கொள்கிறேன்.
கேட்டுக்தவிர்க்க முடியாத காரணத்தால், இந்தஆலோசனைக் கூட்டம் முடியும்வரை உங்களிடம் அமர்ந்து ஆலோசிக்க என்னால் இயலவில்லை. ஆலோசனைக் கூட்டத்தில் இடம் பெற்றுள்ள நீங்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்திட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை நான் கேட்டு தெரிந்து தெரிந்து கொண்டு நிச்சயம் அதற்குரிய நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.