முல்லை பெரியாறு அணை விவகாரம்; செல்லூர் ராஜூ கண்டனம்!

 
sellur raju

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த பாடுபடுவேன் என்று கூறிய மதுரை எம்.பிஐ காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பாக கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும் அதற்குத் துணைபோகும் திமுக அரசை கண்டித்தும் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை மாநகர் முனிச்சாலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார்.

sellur raju

போராட்டத்தின் போது பேசிய அவர், 132 அடியாக இருந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எம்ஜிஆர் தான் 136 அடியாக உயர்த்தினார். பிறகு ஜெயலலிதா 142 அடியாக உயர்த்தினார். அதிமுக ஆட்சியில் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை கேரளாவுக்கு திமுக அரசு தாரை வார்த்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பாஜக கூட குரல் எழுப்பியுள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியை காணவில்லை.  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பாடுபடுவேன் என்று கூறினார். அவரைக் காணவில்லை. ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்று விமர்சித்தார்.