"அண்ணாமலை ஒரு அரைவேக்காடு; கத்துக்குட்டி" : செல்லூர் ராஜூ விமர்சனம்

 
tn

தமிழ்நாட்டில் அரைவேக்காடு யாரென்று கேட்டால் அனைவருக்கும் தெரியும்.  அது அண்ணாமலைதான் என்று செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

tn

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. தொடர்ந்து பாஜகவினர் அதிமுகவையும், அதிமுகவினர் பாஜகவையும் விமர்சித்து வருகின்றனர்.  இந்த சூழலில் போதைப்பொருள் விவகாரம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி,  குஜராத் போன்ற பாஜக மாநிலங்களில் அதிகமாக போதை பொருள் பிடிப்படுகிறது என்று கூறினார்.  இதற்கு பதிலளித்த அண்ணாமலை,  ஒரு பார்டர் மாநிலத்தில் அதிகமாக போதை பொருள் பிடிபடுகிறது என்றால் அங்குள்ள காவல் துறையினரின் ஒழுங்காக வேலை செய்கின்றனர் என்று அர்த்தம். இது கூட புரியாமல் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் என்று கூறியிருந்தார்.

sellur raju

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாட்டில் அரைவேக்காடு என்றால் அது அண்ணாமலைதான்; அரசியலில் அவர் கத்துக்குட்டி.  சென்றமுறை பரப்புரையின்போது பாஜகவுடன் கூட்டணிக்கு வரவேண்டாம் என மக்கள் கூறினார்கள்; அண்ணாமலைக்கு அரசியல் தகுதியே இல்லை; இபிஎஸ்ஸை இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது  என்றார். முன்னதாக எடப்பாடி பழனிசாமியை அரைவேக்காடு என விமர்சித்த அண்ணாமலை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.