அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி - செல்லூர் ராஜூ பதிலடி

 
annamalai sellur raju annamalai sellur raju

அரசியல் விஞ்ஞானி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

sellur
அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தாலும் கூட இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது.  இந்த சூழலில் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எங்களுக்கு பாஜக என்றால் மோடி, நட்டா ,அமித்ஷா மட்டும்தான். அண்ணாமலை என்பவர் தமிழக பாஜகவின் தலைவர் அவ்வளவுதான் என்று கூறியிருந்தார் . இதற்கு பதிலளித்த அண்ணாமலை,  அரசியல் விஞ்ஞானியாக தன்னை நினைத்துக் கொண்டு பேசுகின்ற நபர்களுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

Annamalai

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , "அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும்; அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்துவதில்லை;  பாஜக கட்சியில் இணைந்த ஒரு ஆண்டில் மாநில தலைவராக பதவியேற்றவர் அண்ணாமலை; அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர் ,மாவட்ட செயலாளர், மக்கள் பதவிகளின் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், அதன்பின் அமைச்சரானவன்  நான்; இன்றைக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளராக பதவி வகிக்கிறேன் . எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிறேன். என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்குக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் நன்றாக தெரியும்.

sellur raju

அண்ணாமலையின் கருத்துக்களை நீங்களும் பொருட்படுத்த வேண்டாம். நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன். எங்கள் மீது துரும்பு இருந்தால் கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம் .தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவை விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன ?என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்" என்றார்.