‘பஞ்ச் டயலாக் பேச 3 நாட்களாக ரிகர்சல் செய்கிறார் CM விஜய்!’ - செல்லூர் ராஜூ

 
‘பஞ்ச் டயலாக் பேச 3 நாட்களாக ரிகர்சல் செய்கிறார் CM விஜய்!’ - செல்லூர் ராஜூ

தினகரன், சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்த செல்லூர் ராஜுவிடம், திங்கள்கிழமை நடைபெறவுள்ள முதல்வர் விஜய்யின் பதிலுரை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஒரு முதல்வர் என்றால், உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றால், அதற்கு முதல்வர் உடனடியாகப் பதில் கூற வேண்டும். ஆனால், இவரோ 3 நாட்கள் நேரம் எடுத்துக்கொண்டு வந்து பதில் கூறுகிறார். சட்டமன்றத்தில் நாளை திரைப்பட வசனம் போல் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வர் விஜய் 3 நாட்கள் ரிகர்சல் செய்துவிட்டு வருவார்” என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “தினகரன், சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். அதிமுகவின் எதிர்காலத்துக்கு எது நல்லதோ அதை பழனிசாமி செய்வார். தவெகவில்தொண்டர்கள் இல்லை. வெறும் ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். விஜய்தான் அடுத்த பிரதமர் என அவர்களே கூறி கொள்கிறார்கள்” என்றார்.