தொண்டர்களை உற்சாகபடுத்தவே விஜய் இப்படி பேசுகிறார்- செல்லூர் ராஜூ
நடிகர் விஜய் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவார் என பேசுகிறார், அவர் புதிதாக அரசியலுக்கு களத்துக்கு வந்துள்ளார். ஆகையால் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவ்வாறு பேசி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் R.J தமிழ்மணி சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பலன் அடைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுக ஆட்சியில் வந்த புயலின் சேதாரம் மிகுதியாக இருந்த போதும் மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினோம். இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்கு திமுக வரும் தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர்கள் சொல்வது தான். குடும்பத்தில் உள்ளவர்களை துணை முதல்வர் ஆக்கியுள்ளனர். உதயநிதி சினிமா துறையில் இருந்து வந்தவர், சினிமா செய்தியே பார்ப்பதில்லை என்று சொல்வது வேடிக்கையானது. சினிமா துறையில் இவர்கள் அனுமதிக்காமல் ஒருப்படம் ரிலீஸ் ஆகாது. மக்கள் விழித்து கொண்டு உள்ளார்கள்... விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது.
கள்ளச்சாராயம் சாவிற்கு கமிஷன் போட்டும் இன்றளவும் தீர்வு காணப்படாமல் இருப்பதாக உயர்நீதிமன்ற நம்பிக்கை இல்லை என்று சொல்லி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது. ஓசி பஸ், ஓசியில் நீதிபதி ஆகியுள்ளார்கள் என அமைச்சர்கள் பேசியுள்ளார்கள். மன்னர் பரம்பரையை நாம் ஒழித்து விட்டோம். கருணாநிதி பரம்பரையை ஒழிக்க முடியவில்லை. வீட்டில் பூஜை செய்து விட்டு வெளியில் சனாதன ஒழிப்பு என்பது சரியில்லை. ரவுடிகள் ஆதிக்கம் திமுகவில் இருந்தது. திருமா குறித்து விஜய் சொன்னது 100 சதவீதம் சரி, ஆதவ் அர்ஜுன் விசிகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் பேசியுள்ளார். திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. மற்றவர்களுக்கான அடக்கி வாசிக்கிறார். 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பது எப்படி சாத்தியமில்லை. விஜய் களத்துக்கு புதிதாக வருகிறார். அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்த சொல்கிறார். 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசி வரும் அமைச்சர் சேகர் பாபு, 2026 தேர்தலில் திமுக தனித்து போட்டியிட முடியுமா..? ஆட்சி பற்றி குறை கூறினால் தவறை திருத்திக் கொள்ள வேண்டும், அவதூறாக பேசக்கூடாது. எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய மதிப்பளிக்க முதல்வர் மாண்போடு நடந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.


