திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு - செல்வப்பெருந்தகை இரங்கல்!!

 
tn tn

திமுக எம்எல்ஏ புகழேந்தியின் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் தெற்கு மாவட்ட  திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான திரு.என்.புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.


அவர் எங்களுடன் சட்டப்பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டதையும், அவருடன் பழகிய காலங்களையும் எண்ணி பார்க்கிறேன். அவரது பேச்சுகளும், மக்கள் சேவைகளும் இன்றும் எனது நினைவில் நீங்கா இடம் பெற்று நிற்கின்றன.

திரு. என். புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு  @CMOTamilnadu திரு @mkstalin அவர்கள் மற்றும்  @arivalayam நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் வேதனையோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.