‘இந்தியா' கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இந்த சந்திப்பு ஒரு உதாரணம்- செல்வப்பெருந்தகை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் பேச்சுவார்த்தை குழு நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, எம்.என்.ஹெக்டே உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “எங்கள் குழுவினர் மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்தோம். திமுக தரப்பில் தொகுதி பங்கீடு குழு அமைத்தபிறகு பேச்சுவார்த்தை தொடங்கும். ‘இந்தியா' கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இந்த சந்திப்பு ஒரு உதாரணம். திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியுடன் இருப்பதை இன்றைய சந்திப்பு பறைசாற்றியுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி. ” என்றார்.


