ஜவர்ஹலால் நேருவின் 136வது பிறந்த நாள் - செல்வப்பெருந்தகை மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் 136வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நவபாரத சிற்பி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் பண்டித நேரு அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் பிரதமர் நவபாரத சிற்பி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் பண்டித நேரு அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில்… pic.twitter.com/4FYwxpJ9w6
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) November 14, 2024
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு எம் கிருஷ்ணசாமி Ex MP துணை தலைவர்கள் திரு.கீழானூர் ராஜேந்திரன், திரு சொர்ண சேதுராமன், பொருளாளர் திரு.ரூபி ஆர்.மனோகரன் MLA , சட்டமன்ற உறுப்பினர்கள் திரு J G பிரின்ஸ் MLA , திருமிகு தாரகை கத்பெர்ட் MLA அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், மாநில பொதுச்செயலாளர்கள் திரு அருள் பெத்தையா, திரு தணிகாச்சலம், திரு S A வாசு, தளபதி பாஸ்கர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.