ரக்ஷாபந்தன் - எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வாழ்த்து

 
selva perunthagai

சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறை கட்டுகின்றனர்.  அத்துடன் பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து தமது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள்.  சகோதரர்களின் நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து ,அவர்களுக்கு இனிப்பு வழங்கி, ராக்கி கட்டிய பிறகு சகோதரிகளுக்கு, சகோதரர்கள் பரிசு பொருட்களை வழங்குவார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில்,  அண்ணன் தம்பிகளுக்கு இடையே உள்ள அழியாத அன்பு, நம்பிக்கை மற்றும் பாசத்தின் பண்டிகையான ரக்ஷாபந்தன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ரக்ஷா பந்தன் என்ற தனித்துவமான பண்டிகையானது பரஸ்பர சகோதரத்துவத்தையும், ஜாதி, மதம், சமயங்களுக்கு அப்பால் உயர்ந்து நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கிறது மற்றும் இந்திய சமூகத்தில் பெண்களின் சமத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


இந்த ராக்கி பண்டிகை அனைத்து நாட்டு மக்களின் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தை பரப்பும் என்று நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.