"அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும்" - அமைச்சர் பொன்முடியின் அதிரடி அறிவிப்பு!!

 
ttn ttn

நேரடியாக தேர்வுகள் நடத்த முடியாத நிலை உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இறுதித் தேர்வுகள் மற்றும் நேரடி முறையில் நடத்தப்படும் என்றும், பாலிடெக்னிக் ,பொறியியல் கல்லூரி, அரசு மற்றும் தனியார் ,கலைக் கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ponmudi

இருப்பினும் எந்தவித முறைகேடுகளும் இடம் அளிக்காத வகையில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும் . கொரோனாவால்  தற்போதைய சூழலில் தேர்வுகள் நேரடியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.வரும் 29ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி முதல்வர்களை அழைத்துப் பேசி சென்னை பல்கலைக்கழக கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி  குறிப்பிட்டுள்ளார்.

ponmudi

அத்துடன்  ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும்.  கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.