#BREAKING அதிமுகவிலிருந்து விலகுகிறார் செங்கோட்டையன்?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் கடுமையாக முரண்பட்டு வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் வரும் ஐந்தாம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருப்பதாகவும், அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பல விஷயங்களை தான் பேச இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதிமுகவுக்குள் தொடர்ந்து நிலவும் சலசலப்புகள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அடுத்தடுத்து கூட்டணி கட்சிகள் வெளியேற்றம் என கூட்டணியில் ஏற்கனவே இருக்கக்கூடிய கட்சிகளுடனும் பெரும் பிணக்கு ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில் பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது அதிமுக.
அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் கடுமையாக முரண்பட்டு வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் வரும் ஐந்தாம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருப்பதாகவும், அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பல விஷயங்களை தான் பேச இருப்பதாகவும் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து விலக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டையன் ஒரு வேளை அதிமுகவில் இருந்து விலகும் நிலையில், அடுத்து என்ன செய்வார்? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பாஜக அல்லது திமுகவில் செங்கோட்டையன் நிச்சயமாக இணையமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவுடன் இணைந்தோ, அல்லது தவெகவின் ஒரு அங்கமாகவோ தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இத்தகைய சூழலில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி? என்ற கேள்வி எழுந்துள்ளது.


