“திமுகவிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை”- செங்கோட்டையன்
திமுகவில் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “நான் எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டவன். அவருக்கு பின் அணிவகுத்து நின்ரவன். எம்ஜிஆர் மறைந்தபின் அதிமுக இரண்டாக பிளவுற்றபோது ஜெயலலிதா பின்னால் அணிவகுத்தேன். அதிமுகவிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என ஜெயலலிதாவே என்னை பாராட்டினார். 1975 ஆம் ஆண்டு பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்ஜிஆரால் பாராட்டப்பட்டவன் நான். தவெகவில் நான் இணைந்ததற்கு காரணங்கள் உண்டு. திமுகவும் அதிமுகவும் வேறு வேறு அல்ல. ஒன்றாக இணைந்து பயணிக்கிறார்கள். திமுகவிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. தேசிய கட்சியினரோ, திமுகவினரோ என்னை சந்தித்து பேசவில்லை. பாஜகவினர் உள்ளிட்ட எந்த கட்சியினரும் என்னை சந்திக்கவில்லை. திமுகவில் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி நடத்த ஒருவர் தேவை என்பது மக்கள் மனதில் தோன்றியுள்ளது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்துள்ளார்” என்றார்.


