“ஜெயலலிதா புகைப்படத்தை வைத்துக்கொள்ள தவெகவில் தடையில்லை”- செங்கோட்டையன்
Nov 27, 2025, 13:09 IST1764229168085
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பி அனைவரையும் பார்த்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரின் இல்ல துக்க நிகழ்வுக்கு சென்ற இளைஞரையும் அதிமுகவில் இருந்து நீக்கினர். தெளிவாக யோசித்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தேன். எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அதிமுக 100 நாட்கள்கூட இருக்காது என பேசினார்கள். ஜெயலலிதாவாலும் பாராட்டப்பட்டவன் நான். ஜெயலலிதா புகைப்படத்தை வைத்துக்கொள்ள தவெகவில் தடையில்லை” என்றார்.


