“விஜயை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை” - செங்கோட்டையன்

 
“யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை”- செங்கோட்டையன் “யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை”- செங்கோட்டையன்

தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு இபிஎஸ்க்கு இல்லை என தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Image

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “இப்போது இருக்கின்ற நிலையில் தவெக-க்கும் திமுக-வுக்கும் தான் போட்டி இருக்கிறது. அண்ணா திமுக என்ற இயக்கம் உங்களைப் பொறுத்தவரை அவர் கூறுவது போல நிலையில் இல்லை. ஏனென்றால் இந்த இயக்கத்தை உருவாக்கிய புரட்சித் தலைவர் படம் இல்லை, புரட்சித் தலைவி அம்மாவுடைய படமும் இல்லை.  என்டிஏ கூட்டணிக் கூட்டத்தில் பாரதப் பிரதமரின் தலைமையில், அவர் வரும்போது நடைபெறும் நிகழ்ச்சியில் பின்னால் வைக்கப்பட்டிருக்கும் பேனரிலும் அவர்கள் இல்லை. அப்படியானால் யாரை நம்பி இவர் கட்சியை நடத்துகிறார்? இவருடைய முகத்துக்காகவா ஓட்டு போடுகிறார்கள்? அந்த அளவுக்கு இவருக்கு செல்வாக்கு இருக்கிறதா?  

குறிப்பாக இவர் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்ற வரலாறு இல்லை; நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதை உணராமல், செல்வாக்கு மிக்க தலைவராக, நாளை தமிழகத்தை ஆளப் போகிறார் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒருமனதாக ஒரு புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள். இதுதான் உண்மை.  அந்தப் புதிய மாற்றத்திற்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய் தேவையில்லை என்று இன்று மக்களுக்காகப் பணியாற்றுகிறேன் என்று கூறி, களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.  நீங்கள் எல்லோரும் கேட்கக்கூடும், அண்ணா திமுகவினருடைய இல்லத்திலோ அல்லது மற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினருடைய வீட்டிலோ சென்று கேட்டால், அவர்களுடைய குரல் எப்படி இருக்கிறது என்றால், அவர்களுடைய மனைவி, மகன், மகள் எல்லோருமே, புதிதாக உருவாக்கப்பட்ட TVK தலைவர் வெற்றித் தளபதி விஜய் அவர்களுக்குத்தான் எங்கள் வாக்கு என்று சொல்கிற நிலை இருக்கிறது.  

எங்களைப் பொறுத்தவரை எங்கள் சர்வே மூலம் தெரிந்து கொண்டது, இப்போது 40% இருக்கிறோம். இதுவரை சொல்லாத ஒரு வார்த்தையை ஏன் இவர் இப்போது சொல்கிறார் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.  தூத்துக்குடியில் நடைபெற்ற STERLITE . ஆட்சியில் முதலமைச்சர். 13 பேர்களை குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள். அவர் நேரடியாகப் பார்த்தாரா? 100 நாட்கள் நடைபெற்ற அந்தப் போராட்டத்திற்கு யாராவது அமைச்சர் சென்றிருக்கிறார்களா? இல்லை.  இன்றைக்கு அதையும் இதையும் பேசிக்கொண்டிருக்கிறார், ஒப்பிடுகிறார் என்றால் அவர் முதலமைச்சராக இருந்தபோது அங்கு சென்றிருக்க வேண்டும். 100 நாட்கள் நடந்த போராட்டத்திற்கு ஒரு அமைச்சர் கூட அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்றைக்கு இவர் பேசுகிறார்.  கொடநாடு கொலைகளில் இரண்டு கொலைகள் நடந்த பிறகு, காலையில்தான் எனக்குத் தெரியும் என்கிறார் ஒரு முதலமைச்சராக இருப்பவர்! இவர் எத்தனை முறை அம்மாவிடம் சென்றார் என்பதும் நமக்குத் தெரியும். இவர் எப்படி முதலமைச்சரானார் என்பதும் நமக்குத் தெரியும். எப்படித் தவழ்ந்து வந்தார் என்பதும் நாடு தெரியும்.  அப்படியிருக்க, இவரைப் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை என்பதைத்தான் அங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  ஏனென்றால் மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு மாற்றத்தை விரும்புகிற எதிர்காலத் தமிழகத்தை ஆளப் போகிற நம்முடைய வெற்றிக் கழகத் தலைவர் வெற்றித் தளபதி விஜயால் மட்டும்தான் முடியும் என்பதை 2026 தீர்ப்பு வழங்க இருக்கிறது. அது யாராலும், எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது” என்றார்.