“தமிழ்நாட்டை விஜய் ஆள்வார்! அனைத்து தொகுதிகளிலும் தவெக வெல்லும் சூழல் உள்ளது”- செங்கோட்டையன்

 
zச்

தமிழ்நாட்டை தவெக தலைவர் விஜய்தான் ஆள்வார் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தவெக-வின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “தமிழ்நாட்டை தவெக தலைவர் விஜய்தான் ஆள்வார். 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்படும். அனைத்து தொகுதிகளிலும் தவெக வெல்லும் சூழல் உள்ளது. மற்ற கட்சியினர் அனைவரும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும். ஜனநாயகம் காக்க விஜய்தான் குரல் கொடுப்பார். ஜனநாயகனை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கும் குரல் நமது தலைவரின் குரல். விரைவில் தளபதி தீர்ப்பை எழுதுவார்.. தமிழ்நாட்டை ஆளுகிற ஒரே சக்தி அவர் தான். புரட்சி தலைவரை பார்த்தேன், புரட்சி தலைவி அம்மாவை பார்த்த பிறகு புரட்சி தளபதியை பார்க்கின்ற காலத்தை கூர்ந்து கவனிக்கிறேன்.. நாளை தீர்ப்பு எழுதப்போவது நமது தளபதி மட்டும் தான்” என்றார்.