"என் ரத்தத்தில் விஜயை முதலமைச்சராக்க வேண்டும் என எண்ணம் ஓடுகிறது”- செங்கோட்டையன்
என்னுடைய ரத்தத்தில் தவெக தலைவர் விஜயை முதலமைச்சராக்க வேண்டும் என எண்ணம் ஓடுகிறது என தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய செங்கோட்டையன், “என்னுடைய ரத்தத்தில் தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடுகிறது. விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது எம்.ஜி.ஆர் கட்சி 100 நாட்கள் கூட இருக்காதுனு சொன்னார்கள், ஆனா அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் அவர் தான் முதலமைச்சராக இருந்தார். அதே நிலை தான் எதிர்காலத்திலும் நடக்க போகிறது. ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் என வருடத்திற்கு 500 கோடி ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டு மக்கள் சேவைதான் எனக்கு முக்கியம் என களத்தில் இறங்கியிருக்கிறார் விஜய். அவருடைய மனிதநேயம் பற்றி தெரிந்துகொள்வதற்காக இதனை சொல்கிறேன். அவரை கோட்டையிலே அமர வைப்பதற்கு என் உடலிலே ஓடுகிற ஒவ்வொரு துளி ரத்தமும் சிந்தாமல் சிதறாமல் பணிகளை மேற்கொள்வேன். என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு சொட்டு ரத்தமும் அவரை கோட்டையில் அமர வைக்க உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறது.. 234க்கு 234ம் அடிக்கிறோம்” என்றார்.


