தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்தான் - செங்கோட்டையன்
திமுக ஆட்சியை மாற்ற விஜய்யால்தான் முடியும் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் நடைபெற்றக் கூட்டத்தில் உரையாற்றிய செங்கோட்டையன், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்தான். விஜய்க்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தர ஆர்வமாக உள்ளனர். மனிதநேயத்துடன் 500 கோடி ரூபாய் வருவாயை இழந்துவிட்டு மக்கள் பணியாற்ற விஜய் வந்திருக்கிறார். பலர் விசில் அடித்து கொண்டிருக்கிறார்கள்.விசில் சின்னத்தைப் பார்த்த பிறகு நாங்களே மாறிவிட்டோம். இனிமேல், போலீஸ்காரர்களையும், நடத்துநர்களையும் விசில் அடிக்க வேண்டாமென சொல்லிவிடுவார்கள். விசில் எவ்வளவு முக்கியமானது. அதனை இறைவன் விஜய்க்கு கொடுத்துள்ளார்.
மதுராந்தக கூட்டத்திற்கு நேற்று ஐந்து லட்சம் பேர் வருவார்கள் என்று சொன்னார்கள். ஆனால், 60,000 சேர்தான் போட்டார்கள். 50,000 பேர்தான் வந்தார்கள். அதில் பாதி பேர் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். திமுக ஆட்சியை மாற்ற தவெக தலைவர் விஜயால்தான் முடியும். விஜய் கைகாட்டுவரே சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் தான். தேதி அறிவிக்கட்டும்.. இதுவரை எந்த தேர்தலிலும் நடக்காத ஒன்று இப்போது நடக்க போகிறது” என்றார்.


