அதிமுக வழக்கில் தீர்ப்பு - செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்

 
Tn Tn

அதிமுக உட்கட்சி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வெளியான நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். இந்த நிலையில், அவர் தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.