நாளை மறுநாள் மீண்டும் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் செங்கோட்டையன்!

 
 ‘நாங்கள் பிரியவில்லை; ஒன்றாக இணைந்தே இருக்கிறோம்’  - செங்கோட்டையன் பேச்சு..  ‘நாங்கள் பிரியவில்லை; ஒன்றாக இணைந்தே இருக்கிறோம்’  - செங்கோட்டையன் பேச்சு..

வரும் 9ஆம் தேதி முக்கிய அதிமுக நிர்வாகிகளுடன் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். 

பள்ளிகளில் ஏப்ரல் மாதத்துக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில் வரும் 9ஆம் தேதி முக்கிய அதிமுக நிர்வாகிகளுடன் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை ஒருங்கினைத்து முக்கிய அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.