அதிமுக மூத்த தலைவர் வி.சி.ராமையா சாலை விபத்தில் மரணம்..!
Dec 1, 2025, 11:52 IST1764570123284
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளராக பதவி வகித்து வந்தவர் வி.சி. ராமையா (68). அதிமுக மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் போன்ற பொறுப்புகளையும் வகித்தவர். தனது சொந்த ஊரான வாண்டாக்கோட்டையில் வசித்து வந்த இவர், இன்று( டிச .1) காலை தோட்டத்துக்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, திருவரங்குளம் சாலையில் கார் மோதி படுகாயமடைந்தார்.
பின்னர் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பலியானார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டு ஜெயலலிதாவால் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ராமையாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


