மூத்த குடிமக்கள் உதவி மையம், பந்தம் சேவை மையம் மூலம் 2,225 பேருக்கு உதவிகள்..!

 
பந்தம் சேவை மையம் பந்தம் சேவை மையம்

மூத்த குடிமக்கள் உதவி மையம் மற்றும் பந்தம் சேவை மையம் மூலம் இதுவரை 2,225 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ நடப்பு 2025-ம் ஆண்டு மூத்த குடிமக்கள் உதவி மையம் மூலமாக மொத்தம் 2,242 அழைப்புகள் பெறப்பட்டு, அதில் 17 அழைப்புகளுக்கு சட்ட ரீதியாக அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு முதியோர் உதவி மையம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு புகாரின் தன்மையை பொறுத்து துரிதமாக 24 மணி நேரத்திற்குள் மூத்த குடிமக்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2,225 அழைப்பாளர்கள் கேட்ட உரிய பொது தகவல்கள் உடனுக்குடன் வழங்கி உதவிகள் செய்யப்பட்டது.

பந்தம் சேவை மையம்

சென்னை பெருநகர காவல்துறையில் முதியோர் உதவி மையத்தை தொடர்ந்து 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவிட  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் 2024ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பந்தம் சேவை திட்டம் மூலம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், வழிகாட்டுதலின்பேரில், சென்னை பெருநகர காவல் சார்பாக காவல்துறையினர் உதவி புரிந்து வருகின்றனர். பந்தம் சேவை திட்டம் கைப்பேசி எண் 9499957575 மூலம் மூத்த குடிமக்களோ, அவர்கள் உதவி கோரும் நபரோ தொடர்பு கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு, மருத்துவம், ஆலோசனைகள், சட்ட உரிமைகள் உட்பட இதர அத்தியாவசிய தேவைகளுக்கு ஒருங்கிணைந்து உதவி செய்து வரப்படுகிறது. 

முதியோர் இல்லத்தில் இருந்து எஸ்கேப்.. ஊரடங்கு காலத்தில் மூதாட்டி செய்த வேலைய பாருங்க!

முக்கியமாக மூத்த குடிமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து உதவிடுவதற்கு பந்தம் சேவை திட்டம் மூலம் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் நிலைய அதிகாரிகள் மூலம் உடனடி உதவி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை பெருநகரில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளால் தனித்து வாழும் முதியோர்கள், வாரிசு இல்லாத முதியோர்கள் என தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் அழைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆலோசனைகள், சட்ட உதவி மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து காவல்துறையினர் செயல்படுகின்றனர். 

2025-ம் ஆண்டு இதுவரை பந்தம் உதவி மையம் மூலமாக 185 அழைப்புகளுக்கு சட்டரீதியான தீர்வும், 06 அழைப்புகளுக்கு மருத்துவ உதவியும், 05 அழைப்புகளுக்கு பாதுகாப்பு உதவியும், 41 அழைப்புகளுக்கு இதர அத்தியாவசிய உதவியும், 954 அழைப்புகளுக்கு தகவல் மற்றும் வழிகாட்டுதல் உதவியும் கோரப்பட்டால உடனடியாக உதவி செய்யப்பட்டு, மொத்தம் 1,191 அழைப்புகள் பெறப்பட்டு, ஒவ்வொரு அழைப்புகளும் 72 மணி நேரத்திற்க்குள் தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, சென்னையில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், சென்னை பெருநகர காவல்துறையின் முதியோர் உதவி மையம் எண்.1253 அல்லது 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான பந்தம் சேவை திட்டம் எண் 9499957575 ஆகியவற்றை தொடர்பு கொண்டு காவல்துறை மூலம் தேவையான உதவிகளை பெற்று பயனடைய, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதேபோல மூத்த குடிமக்கள் உதவிகள் அற்ற நிலையில் அழைத்த அழைப்புக்கு சென்னை பெருநகர காவல் துறையில் செயல்பட்டு வரும் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் நடப்பு 2025ம் ஆண்டில் இதுவரை 646 மூத்த குடிமக்கள் மீட்கப்பட்டு தகுந்த பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு 117 மூத்த குடிமக்களின் முகவரிகளை கண்டறிந்து காணாமல் பரிதவித்த அவர்களது குடும்பத்துடன் மீண்டும் காவல் துறையினரால் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்”என்பது குறிப்பிடத்தக்கது.