சென்னையில் பரபரப்பு..! ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Sep 8, 2025, 12:48 IST1757315891253
சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு மிரட்டலை அடுத்து தலைமைச் செயலகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.
சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று மர்ம நபர்கள் தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். இந்நிலையில் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த போலீசார், அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் இரண்டு இடங்களிலும் காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


