செந்தில் பாலாஜி ஜாமின் மனு - பிற்பகல் 3.30க்கு விசாரணை

 
senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நிலையில் ரத்த குழாய்களில் மூன்று அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு இதய  அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.
 

senthil balaji

இந்த சூழலில் அமலாக்கத்  துறையின் விசாரணை காவல் கோரிய  மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரிக்கப்பட உள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிந்த பின்பே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படுமா? செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து தெரியவரும்.இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். இடைக்கால ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் துரை கண்ணன் முறையீடு செய்துள்ளார்; காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு ஜாமின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால்  நிராகரிக்க கூடிய மனு செல்லதக்கதல்ல என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.