முதல்வர் காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி

 
வ்

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிரதமர் உடனான சந்திப்பை முடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை திமுக அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் பொன்னாடை கொடுத்து வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சர் ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்றார். 

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக நலன் சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை  நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய ஸ்டாலின், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இல்லத்துக்கு சென்று அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Image

டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் பொன்னாடை கொடுத்து வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பிறகு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது,முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொன்னாடை கொடுத்து காலில் விழுந்து ஆசிப் பெற்றார். 

அதனை தொடர்ந்து வரவேற்பு அறைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்,திமுக நிர்வாகிகளுடன் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு முதலமைச்சர் புறப்பட்டு சென்றார்.நாளை அங்கிருந்து புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.