அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்!

 
senthil balaji

விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை இரண்டு முறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் இதுவரை ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக அமைச்சர்  செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் நிறைவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ததில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்ய ஏதுவா செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகுமார் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சம்மன் அனுப்பியும் கடந்த 19-ந் தேதி அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்பட்டுகிறது. 

senthil balaji house

இதனை தொடர்ந்து சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு 20-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் சம்மன் அனுப்பியும் 2-வது முறையாக இன்றும் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தரப்பு கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.