செந்தில் பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறை விசாரிக்க தடை இல்லை!
Mar 13, 2024, 12:28 IST1710313113436
அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மறுஆய்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. சிறப்பு நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை ED வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது.
செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்.25க்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்.மாநில போலீசார் வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க செந்தில் பாலாஜி மனு அளித்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.