"செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கவில்லை" - அமலாக்கத்துறை தகவல்!!

 
senthil balaji

செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை  என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

tn

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு , அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில்,  விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.  அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  அவர் வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இதய  அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னை ஆழ்வார்பேட்டையில் அமர்ந்துள்ள காவிரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். நாளை அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

tn

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை கருதி அவரை காவலில் எடுக்கவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கியிருந்தது நீதிமன்றம். ஆனால் அவரின் உடல்நிலை கருதி அவரை காவலில் எடுக்க முடியவில்லை என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது.  இந்த சூழலில் அவரை காவலில் எடுப்பது குறித்து அமலாக்கத்துறை தாக்கல்  செய்த மனு மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. முன்னதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில்,  அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது . அமலாக்கத்துறை சார்பில் இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில், அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என அசோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.